ஒட்டுக்கேட்ட சில உண்மைகள்
ஒரு சில
மாதங்களாக நான் உடல் எடை குறைக்க முயற்சிப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும் இல்லையா? அதனால் கடந்த ஞாயிறு மாலை நான் நம்ம மறினா கடற்கரைக்கு நடக்க
போயிருந்தேன். நடந்து கொண்டே என் முன்னாடியும் பின்னாடியும் நடக்கும் சம்பாஷணைகளை காதில்
கேட்டுக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன். அதில் கேட்டவைகளில் ஒன்று :
மச்சி அவள
பார்த்தியா? சூப்பரா இருக்கா இல்ல?
ஆமாம்
மச்சான்...அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்ற?
இல்லடா....சும்மா
ஒரு பேச்சுக்கு சொன்னேன்.
சொல்லி
முடிச்சுட்ட இல்ல, அப்போ மூடு.
என்னடா? என்ன ஆச்சு
உனக்கு? பாக்கற ஒரு பிகர்ரயும் விட மாட்டியே? உடம்பு கிடம்பு சரியில்லையாடா?
அதவிடு, உன்னக்கு
என்ன வேணும்?
இல்ல மச்சி, அந்த
பொண்ண பார்த்தோமே, அவள போடணும்டா.
அடப்பாவி, அவ
என்னடா பண்ணா உன்ன? நல்லா அழகா இருந்தா. அவள ஏன்டா கொல்லனும்ன்னு நெனைக்கற?
இதான் மதுரைக்காரன்ட்ட
தமிழ் பேச கூடாது போல......
புரியாதவர்கள்ளுக்கு
:
போடறது : சென்னை
தமிழில்- உடலுறவு/ மதுரை தமிழில்- கொலை.
தமிழின் பல பரிமாணங்கள்
நம்மை மிரள செய்கிறது அல்லவா?
For those who didn’t get the joke :
Podaradhu : In Chennai Tamil – To have
sex with/ In Madurai Tamil – to murder….dialects differ from region to region
and cause confusion, don’t they?
தமிழ் வாழ்க...
ReplyDeleteஆமாம் ஜோதி ஆமாம்
Delete