Wednesday, February 19, 2014

பசங்க பசங்க தான்




பசங்க பசங்க தான்



கடந்த மூன்று நாட்களாக நான் சென்னை அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்க்ரீன்நிங் கேம்ப் எனும் தடுப்பு முகாம்களில் கலந்துகொண்டு அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன் காலம் கழித்து கொண்டிருக்கிறேன். அங்கு நடந்த ஒரு சில சம்பாஷணைகள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இதை எழுதுகிறேன்.


பையன் 1.    

நான்: டேய் நீ வளர்ந்து பெரிய ஆள் ஆனதும் என்ன ஆகணும்னு நெனைக்கற?

ஏழு வயது பையன் : அண்ணா நான் பெரிய டான்சர் ஆக நினைக்கிறேன்.

நான்: ஏன்டா, நீ படிச்சு டாக்டர் இல்லை என்ஜின்னிர் ஆகணும்ன்னு ஆசை இல்லையா?

பையன்: அது எல்லாம் கஷ்டம்ன்னா. நல்லா டான்ஸ் அடினா மாணாட மயிலாட நிகழ்ச்சி’ல ஆடி உடனே பெரிய ஆள் ஆகிடலாம்.

நான் : அடப்பாவிகளா. டிவி எப்படி எல்லாம் மக்கள்’ல கெடுக்குது. 

     
                                      
பையன் 2.

நான் : என்னப்பா பண்ணுது உனக்கு?

பையன் : என் வயித்துல நாக பூச்சி இருக்கு ஸார்.

நான் : அது எப்படி டா உனக்கு தெரியும்?

பையன்: அப்போப்போ அது என் வயத்துல படம் எடுத்து ஆடி புஸ்ஸு புஸ்ஸு’ங்குது.

நான் : அடேங்....



பையன் 3.

நான்: டேய் கால்’ல என்னடா அடி?

பையன் : எங்கம்மா கரண்டியில்ல அடிச்சுட்டுடா டாக்டர்.

நான் : ஏன்டா? நீ என்ன பண்ண இப்படி அடிச்சு இருகாங்க?

பையன் : நான் தான் ஒரு பெரிய கல்லு அடிச்சு அவ மண்டைய ஒடசிட்டேனே. அதான் அவ திருப்பி அடிச்சா.

நான் : எப்பா நீ கொஞ்சம் தள்ளியே உட்காருப்பா.



இது ஒரு சாம்பிள்தான். இந்த மாதிரி நாள் பூரா என்னை சிரிக்க வெச்சுக்கிட்டாந்தாங்க. ஒரு பத்து வயசு கொறஞ்சது மாதிரியே இருக்கு எனக்கு. பசங்க பசங்க தான்.          

No comments:

Post a Comment