Sunday, December 20, 2015

ஆம்லெட் எகாநோமி தியரி – என் இலங்கை பயண கட்டுரைகள்-1

ஆம்லெட் எகாநோமி தியரி – என் இலங்கை பயண கட்டுரைகள்-1



“என்னது ப்லிய்ட்டு கான்செல்லா????” என்று வாயை பொலந்ததொடு எதிரில் இருந்த தொசையை அப்படியெ தொடம வெச்சுட்டேன். என்னடா இது ஒரு பெரிய மேட்டர்ரான்னு நீங்க நெனைக்கறது தெரியுது- நான் தொசையை தொடாதது அதிசயம் அல்ல. எது அதிசயம் என்றால் என் எதிரில் அமர்ந்து இருந்த என் நண்பர்கள் எல்லாம் நான் தோசையை தொடாமல் வைத்து விட்டதை வாயை போலந்து பார்த்தது தான். அப்படி என்ன அந்த தோசையில் என்று நீங்கள் யோசிக்கறத்துக்கு முன்னாடியே சொல்லிடறேன் அது ஒரு சதா மசாலா தோசை தான். ஆனால் அந்த தோசைக்கு நான் பட்ட பாட்டிருக்கே – அஞ்சு நாளா தோச தோசன்னு ஆயிரம் கிலோமீட்டர் அலைஞ்சது - அதுதான்ங்க இங்க மேட்டரு.




இலங்கை என்னும் ஸ்ரீலங்காவுக்கு ஒரு வாரம் சுற்று பயணம் போன பொது நிறைய பேறு நிறையவே அட்வைஸ் சொன்னாங்க. இலங்கையில இப்படி இருக்கும் அப்படி இருக்கும், இப்படி நடந்துக்கணும் அப்படி நடந்துக்கணும்னு. ஆனா எந்த எழவெடுத்த நாதாரி பயலும் கடைசி வரைக்கும் சொல்லவேயில்ல சாப்பாட்டுக்கு அங்க நீங்க டிங்கி தான்டா அடிக்கனுமுன்னு. தப்பா நெனக்காதீங்க என் கிட்டக்க காசு நிறையவே இருந்துச்சு – நம்ம ஊரு ரூபா ஒண்ணுக்கும் அவங்க ரூபா ரெண்டுன்ன தாராளமா செலவு பண்ணலாம்லா. ஆனா அந்த ஊர்ல எறங்குன முதல்லா சோறு தண்ணி கண்ணுலயே படலங்க. எந்த ஹோட்டல்லுக்கு போனாலும் ஆப்பம் இடியாப்பம்ன்னு இந்த ரெண்டு தான் குடுக்கறணுங்க திங்க – வேற எதுவும் தெரியல அவங்களுக்கு. மிஞ்சி போனா பரோட்டா போடறானுங்க – அதுவும் ஆறிபொய்யி.

அதுக்கும் தொட்டுக்க என்ன தெரியுமா? கருவாட்டுக் கொழம்பும் மீன் கொழம்பும். காலங்காத்தலே டிபன் சாப்பிட போன காரமா கருவாட்டுக் கொழம்பும் ஆப்பமுமா வெக்கறான்னுங்க எதுரல. நான் சாதரணமா  கருவாட்ட ஒரு பிடி பிடிக்கறவன் தான், மீன்னுணா எனக்கு உசுரு தான். ஆனா அதுக்குன்னு காலையில ஆறு மணிக்கு அறதூக்கத்துல இந்தா கருவாடுன்னா எப்பிடி?? சரி போனா போகுதுன்னு ஒரு நாள் மீன் கொழம்பும் ட்ரை பண்ணி பாப்போமேன்னு ஆர்டர் பண்ணா- ஒரு சட்டி நிறைய கொளம்ப கொடுத்தான். உள்ள தேடி தேடி பாக்கறேன் மீனே காணோம். எங்க பாஸ் பீசு காணோம்னு கேட்டா, நீங்க கொளம்ப தானே ஆர்டர் பண்ணீங்க, மீன் பீசு எக்ஸ்ட்ரா’ங்கரன். டேய். அந்த மீனா கண்ணுலயாச்சும் காட்டுங்கடா நான் சாப்படறது மீன கொழம்பு தானான்னு கான்பிறம் பண்ணிக்கறேன்ங்கற லெவெலுக்கு கொண்டாந்த்துட்டானுங்க.

இத்தனைக்கும் அந்த ஆப்பம் இடியாப்பாம் ஒன்னும் சீப்பாய் இல்ல. எந்த தட்டுக்கடைக்கு போனாலும் நம்ம ஊரு சரவணா பவன் ரேஞ்சுக்கு விலைய சொல்றான்னுங்க. ஒரு சாத “டிபன் பிளஸ் டி” சாப்பிட்டா ஆயிரம் ரூபாய்க்கு கொறைச்சல் இல்லாம பில்ல தீட்டுறாணுங்க. ஆனா தோசை இட்லி மட்டும் கெடைக்காது எங்கேயும். ஒரு நாள் நைட்டு நமக்கு தெரிஞ்ச ஒரே வேலை இல்லா பட்டதாறி கோபால்’லுக்கு போன் போட்டு “தம்பி நீ உடனேயே கோடீஸ்வரன் ஆகனுமா? டக்குனு ஒரு விசா வாங்கிட்டு இலங்கைக்கு வந்து ஒரு தோச கடைய போட்டு பாரு. அடுத்த சரவணா பவன் அண்ணாச்சி நீ தான்டா ராசா’ன்னு” ஐடியா வேறு கொடுத்தேன்.

இந்த வேலவாசி பகல் கொள்ளைய சமாளிக்க ஒரேயொரு வழி தான் தோனுச்சு. ஒர்ரு ஹோட்டல்ளையும் மெனு கார்டு ப்ளீஸ்னா நம்மளை அண்ணாந்து புதுசா என்னத்த கேக்கராணுங்க’ன்னு பாக்கறப்போ ஒரு ஐடியா தோணிச்சு - ஆம்லேட் வெலைய முதல்ல கேப்போம் அப்புறம் அதா வெச்சு எக்குதப்பா நம்மாளே டெசைய்டு பண்ணுவோம்’ன்னு. ஏன்னா இத்தனுண்டு சிங்கள் அம்லேட் கூட மூண்ணூறு ரூபாய்ன்னு ஹார்ட் அட்டாக் குடுகக்றணுங்க. அதான் ஆம்லேட் வேலைய வெச்சு ஹோட்டலுக்கு உள்ள போலாமா வேணாமான்னு முடிவெடுக்கறதுன்னு ஒரு ப்ரில்லியன்ட் ஐடியா’வ எங்க அண்ணன் ஜோதிவேல் அவுக கண்டுபிடிச்சாங்க. அதுவும் நல்லாவே வொர்க்அவுட் ஆச்சு ட்ரிப்பு முழுக்க. முட்டையயே பாக்கா’த ஊருடா அது’ன்னு எந்த பிளாகர் கம்நாட்டியும் அவன் ப்லாக்’ல இதுவரைக்கும் எழுதவேயில்லங்கற மேட்டற நான் தாழ்மையோடு இங்க தெரிவிச்சுக்கறேன். ஆகமொத்தம் நம்ம “ஆம்லெட் எகாநோமி தியரிய” நான் ஐய்னா சபைக்கு அனுப்பலாம் இருக்கேன்.



சரி, நம்ம கைக்கு எட்டுன தோச வாய்க்கு எட்டாத மேட்டர்க்கு வருவோம். அண்ணா....அத்தா....இட்லி, தோசை, சோறு எங்க கெடக்கும்’ன்னு ஒரு வாரம் பூரா இலங்கை மொத்தம் அலஞ்சவனுக்கு கடைசி நாள் அன்னிக்கி காலைல்ல கொளோலம்போல்ல ஒரு ஹோட்டல்ல தோச, மசாலா தோச, பேப்பர் ரோஸ்ட்ன்னு பார்த்த உடனே “தாய் மண்ணே வணக்கம்’ன்னு” எ.ர்.ரஹ்மான் பீஜிம் எல்லாம் கேக்க நாக்கு எச்ச சுரக்க உட்காந்தவண்ட்ட எதிர்ல இருந்த நம்ம குழு தலைவர் (இது அணைத்து வயதினரும் படிக்கும் பதிவானதால் டிசண்டாகா சொல்லிக் கொள்கிறேன்) அண்ணன் ஜோதிவேல் அவர்கள் அப்போ பார்த்து “ஜீ, இன்னிக்கி நைட்டு நம்ம ரேடுர்ன் ப்ளய்யிட்டு கான்செல் ஆயிடுச்சு சென்னை வெள்ளத்தால. இன்னும் நாலு நாளைக்கு நாமா இங்க தான்’ன்னு” ஒரு போடு போட்டாரே பாருங்க. அப்புரம் தோச எறங்கும்மா உள்ள? 

இப்படி பட்ட சில/பல உள்குத்துகளை வாங்கி அதையும் தாண்டி நான் எப்பிடி நம் தாய் நாட்டுக்கு உயிரோட மீண்டு வந்தேன்’ங்கற மீதி மேட்டர்’ரா அடுத்த பதிவுல சொல்றேன். மீண்டும் வருக.





1 comment:

  1. நன்றி திரு. கணேஷ்! உங்க கிட்டே இருந்து நான் இன்னும் நிறைய எதிர்பார்கரேன் பாஸ்!

    ReplyDelete