Sunday, November 3, 2013

எங்கே என் கொச்சி ?எங்கே என் கொச்சி ?கடந்த வாரம் ஒரு மருத்துவ மாநாட்டிற்கு கேரளாவில் உள்ள கொச்சின் நகரத்திற்குச் செல்வதற்கு நண்பர் கதிரேசன் உடன் பயணப்பட்டேன். சென்னையின் புதிய (ஆனால் பழைய) விமான நிலையத்தில் இருந்து காலை பத்து மணிக்கு புறப்படும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில்தான் கொச்சி சென்று இறங்கினோம். குறைவு விலை சேவை என்பதால் வெறும் டர்போ ப்ராப் விமானம் தான் பறக்கிறது சென்னைக்கும் கொச்சிக்கும் இடையில். ஆக ஜெட் விமானத்தில் சென்றால் ஒரு மணி நேரம் கூட ஆகாத பயணம் ப்ரோபெல்லர் விமானதில் சென்றதால் எங்களுக்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. நண்பர் கதிருக்கு இது முதல் விமான பயனமாதளால் அவர் நேரம் போனதே தெரியாமல் ரசித்து பயணம் செய்தார். எனக்கு தான் சிறிது போர் அடித்துவிட்டது. அதுவும் எங்கள் ஸ்பைஸ் ஜெட்டில் கிண்க்பிஷேர் ஏர்லைன்ஸ் போன்ற நச்ச்சன்ற விமானப் பணிப்பெண்களும் இல்லை. இருந்த ஒரேயொரு யேர்ஹோஸ்டெஸ்ஸும் சுமார்தான்- பத்திற்கு நான்கு குடுக்கலாம். அந்த அம்மணியின் உடுப்பும் சரியில்லை இடுப்பும் சரியில்லை- இரண்டுமே ஒரு சுற்றுப் பெருசு.ஆனால் நண்பர் கதிர் அந்த அம்மணியையும் விடவில்லை. நாங்கள் பறந்த இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு தடவைக்கு நான்கு தடவை அவளை அருகில் அழைத்து அழைத்து நீர் (வெறும் தண்ணீர் தான்) வாங்கி குடித்துவிட்டார். அவள் சிரித்து சிரித்து கேட்டாலும் சாண்ட்விச் பிரியாணி போன்ற வேறு எதுவும் வாங்கினால் காசு இல்லையா? அதனால் ஓசி தண்ணீரை ரசித்து குடித்தே தன் இச்சையை தீர்த்துகொண்டர் நம்ம கதிர். கொச்சி விமானதளத்தில் தரை இறங்குவதற்கு ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் நண்பருக்கு வயிற்றில் என்னமோ செய்ய (சும்மா விடுமா ஓசி தண்ணியும் பெண்கள் சாபமும்? ) அவர் அவசரமாக சீட் பெல்ட்டை கழட்ட முயிற்சிக்கும் போது எதற்கும் முயற்சிப்போம் என்று சும்மா ஒரு பிட்டு போட்டேன்- ஆச்சர்யம், அவரும் நன்நம்பிவிட்டார். அதாவது இந்த மாதிரி மலிவு விலை விமானங்களில் அவர்கள் தண்ணிரை பலமுறை இலவசமாக கொடுக்கும் காரணம்- எல்லாவற்றையும் சேர்த்துப் பிடிப்பதற்கு தான் என்றும். ஒரு ஒரு முறையும் கழிப்பறையை உபயோகிக்க நூறு ருபாய் (பிளஸ் டாக்ஸ்) வசூலிப்பார்கள் என்றும் கொளுத்தி போட்டேன், அவரும் அதை நம்பி இது எல்லாம் அவ்ளோ வொர்த் இல்லே பாஸ் என்று அப்பாவியாக சொல்லி அடக்க ஒடுக்கமாக (பிடித்துக்கொண்டு அடக்கிகொண்டு) அடுத்த அரைமணிநேரமும் அமைதி காத்தார்.விமானம் தரையிறங்கியதும் பேக்கேஜ் கரோசல் பக்கம் கூட பார்க்காமல் “என் கறுப்புப் பைய வந்தா புடிச்சு வெயுங்க பாஸ்னு” ஒரே ஓட்டமாக ஓடி போனவரு தான். பத்து நிமிஷம் கழித்து தான் பரேஷ்ஷா வெளியே வந்தார் அவர் பையை என்கிட்ட இருந்து வாங்கிக்க. கொச்சின் ஏர்போர்ட்டில் ஒரு விசித்திரம் என்னன்னா இடது பக்கம் திரும்பினா அது சர்வதேச விமான நிலையம்னு ஒரு போர்டு, அதே வலது புறம் திரும்பினா உள்ளூர் விமான நிலையம்னு போர்டு, ஆகமொத்தம் அது ஒரு டூ இன் ஒன் “மெடிக்கல் மிரக்கல்தான் போங்க. உள்ளேயே கால் டாக்ஸி பேசிக்கலாம்னு சொன்னபோது கதிர் ரொம்பவே புத்திசாளித்தனமா பேசற மாதிரி “அதெல்லாம் வேணாம் பாஸ், நாம வெளிய போயி பேசுனா சீப்பா பேசிக்கலாம்னு” என்னையும் வெளிய இழுத்துட்டு வந்துட்டாரு.


வெளியே வந்து பார்த்தால் தான் எங்க உண்மை நிலையே தெரிஞ்சது. கொச்சியில் நம்ம ஊரை போல ஆட்டோகள் சுலபமாக கிடைக்காது எல்லாம் ஷேர் ஆட்டோ தான் என்று பிறகு தான் தெரிந்து கொண்டோம். தலைக்கு இரண்டு பைகளை பார்த்ததும் ஷேர் ஆட்டோகள் நிறுத்தாமல் கடந்து சென்று கொண்டே இருந்தன. கடைசியில் எங்கள் மீது பரிதாபப்பட்டு ஒரு ஷேர் ஆட்டோ நின்றதும் நண்பர் கதிர் என்னைப் பார்த்து “நான் பேசறேன் பாஸ்” என்றார். எனக்கு தெரிந்த ஓரே மலையாள வாக்கியம் நம்ம சூப்பர் ஸ்டார் முத்து படத்தில் சொல்லும் “இருக்கி அணைச்சி ஒரு உம்மா குடும்” மட்டும்தான் என்பதால் நானும் அமைதியாக அவர் இஷ்டப்படி செய்யட்டும் என்று விட்டு விட்டேன். கதிர் அந்த ஆட்டோ ஓட்டுனர் இடம் “கொச்சின் செல்லணும்” என்று தமிழிலேயே கேட்டார். ஆட்டோ ஒட்டுனரோ “எர்ணாகுலமோ?” என்று இழுத்து கேட்டார். நண்பர் கதிர் மறுபடியும் பொறுமையாக “கொச்சின், கொச்சின்” என்று காது கேளதவனுக்கு சொல்றது போல கத்தி சொன்னார். மீண்டும் ஆட்டோ ஓட்டுனர் “அதே எர்ணாகுளம்” என்று நண்பரை பார்த்து நகைத்தார்.

கடுப்பாகி போனார் நம்ம கதிர் “கொச்சின் கிரிக்கெட் ஸ்டேடியம் பக்கம் போகணும்” என்று கொஞ்சம் உரக்கமாக கத்தினார். ஷேர் ஆட்டோவில் இருந்த ஒரு பயணி குனிந்து ஓட்டுனரிடம் “அதே கல்லூரூ” என்றார். கதிர் முகம் கருக்க ஆரம்பித்தது கோபத்தில் “கொச்சின் அறியுமோ இல்லையோ? அங்கே ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் இறக்கிவிடு போதும்டா” என்றார் சிறிது சத்தமாகவே. என்னக்கு ஒன்றும் விளங்கவில்லை – விமான நிலையத்தில் இருந்து நேரே ரயில்வே ஸ்டேஷன்க்கு எதுக்கு போறோம் பாஸ் என்று நான் கேட்பதிற்குள் ஆட்டோ ஓட்டுனர் “ஓஹோ எடைப்பள்ளியோ, இருக்கி இருக்கி” என்று எங்களை உள்ளே இறுக்கமாகக் இருக்கி கொண்டு புறப்பட்டு விட்டார். நாங்களும் இங்கேயே நிற்பதற்கு பதில் வேறு எங்கேயாவது போயி நின்று பொழுது போக்குவோம் என்று ஏறி கொண்டோம்.

மெல்ல என் மூளை வேலை செய்ய நான் என் செல் போனில் உள்ள GPS ஆன் செய்து Google Maps ஓபன் பண்ணுவதை பார்த்த எங்கள் கூட பயணித்த என் பக்கத்து இருக்கை பயணி தன் கையை ஆட்டோக்கு வெளியே நீட்டி “இது எடப்பல்லி, அது எர்ணாகுளம், ஸ்டேடியம் கள்ளூர்” என்று சைகை செய்து காட்டினர். “அப்போ கோச்சி எங்க தான் ஸார்?” என்று நான் பரிதாபமாக கேட்டான் அவரிடம். “எல்லாம் கொச்சியே” என்று அன்பே சிவம் கமல்ஹாசன் மாதிரியே ஸ்டைலாக சொன்னார் அவர். அப்போது தான் என் மரமண்டைக்கு அது எட்டியது- நம்மூரில் உள்ள மயிலாப்பூர், அடையார், அண்ணா நகர் மாதிரியே கொச்சியின் சில பாகங்கள் தான் எடப்பல்லி, எர்ணாகுளம், கள்ளூர் போன்றவை- எல்லாமே கோச்சி தான்”. இனிமேல் யாரிடமும் கோச்சி என்று பொதுவாக கேட்காமல் பக்கத்தில் உள்ள இடத்தை கேட்கவேண்டும் என்று புரிந்து. இது தெரியாமல் இவ்வளவு நேரம் வீணடித்து விட்டோமே என்று ஒரு பக்கம் இருந்தாலும் இதற்கு காரணமான அதிகப்பரசங்கியை – ஏர்போர்ட்டில்லேயே கால் டாக்ஸி பிடிக்க விடாமல் எல்லாம் என்னக்கு தெரியும்னும் நான் பார்த்துக்கறேன்னும் சொல்லி வெளியே இழுத்து வந்த மேதாவியை என்ன செய்வது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.

நாங்கள் இருவரும்- நானும் பக்கத்துஸீட்டு கேரளாகாரரும் பேசுவதை எதையுமே காது கொடுத்து கேட்காமல் மூட் அவுட்டாகி தனக்குத் தானே “பிலேன்ல இறக்கி விடறப்போ கொச்சின்னு அர்ரைவ்வடுன்னு சொன்னான்னுகளே சொன்னான்னுகளே” விடாம முனுமுணுத்துக் கொண்டிருந்த நம்ம கதிர் பக்கம் திரும்பி நான் மெதுவாக “பாஸ்ஸு, ரயில்வே ஸ்டேஷன் போய் இறங்கியதும் பக்கத்துலே போலீஸ் ஸ்டேஷன் இருக்கான்னு யார்ட்டையவது விசாரிச்சு அங்க போயி முதல்ல ஒரு ரிட்டன் கம்ப்ளெயின்ட்ட குடுத்து வெச்சிருவோமா எதுக்கும்?” என்று மெல்ல அவரை உசுப்பேத்தினேன். யோசனையை கலைத்து என் பக்கம் திரும்பி “என்னனு?’ என்றார் அப்பாவியாக. நானும் சீரியஸ்ஸாவே (வைகைப் புயல் வடிவேலு கணக்கா) பதில் சொன்னேன் “என் கொச்சியை காணோம் தான் பாஸ்ஸு”. கதிர் கத்திய “கன்சூசூசூசூ ஏன்ன்ன்?” சென்னை வரைக்கும் கேட்டிருக்மே?

பின் குறிப்பு: என் வலைப்பதிவில் அடுத்து வரபோகும் என் கோச்சி கதைகளின் அடுத்த அத்தியாயம் – கேரள நாட்டின் இளம் பெண்களுடனே- தவறாமல் படியுங்கள்

4 comments:

 1. Ha ha ha!!!! Adheppadi boss, idellam paakkamale anga poninga?? Enga poringandratha maps-la already paakka maatingala???!!!

  ReplyDelete
  Replies
  1. ellam oru nambikai dhan....kadavul vita vazhi nu poiyetean.....bhusha

   Delete
 2. அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்...

  ReplyDelete
  Replies
  1. eluthikitey erukean.....seekeram publish pannidarean

   Delete