ஆண் பாவம்......
தஞ்சாவூர்ல இருந்து ஒரு போன் கால் வந்துச்சு அலையன்ஸ்
விஷயமாக. பேசுனது பொண்னோட அப்பா தான். எடுத்த எடுப்பிலேயே அவர் சொன்னது “என் பொண்ணு உயரமா, ஒல்லியா, வெள்ளவெளேர்னு
இருக்கும். உங்க பையன் எப்படி கலரா இருப்பாரா?”ன்னு தான் அந்த மனுஷன் ஆரம்பிச்சு
இருக்காரு. எங்கப்பா ஒரு சத்திய கீர்த்தி இல்ல உடனே இவரு “நம்ம புள்ளயாண்டன்
மாநிறம்தாங்க’ன்னு” எனக்கு ஒரு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறாரு.
அதோட விட்டாரா
“நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேனே வெயில்ல அலையாதரா அலையாதரா’ன்னு இவன்
கேட்டா தானுங்க? விடாம வெயில்லேயே தெரு
தெருவா அலையறான்’ன்னு” வேற ஒரு போடு போட்டிருக்காரு. செரி மேட்டர்’க்கு வருவோம்.
பொண்னோட அப்பா சொன்னாராம் அவர் பொண்ணு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்
வேலை செய்யறாங்கன்னு.
நான் நைட்டு வீட்டுக்கு
வந்ததும் எங்க அம்மா ஒரே பரபரப்பா சொன்னாங்க. நானும் யோசிச்சேன் – அட தஞ்சாவூர் நமக்கு
தெரிஞ்ச ஊர் தானே, நாம ஏற்கனவே வேல பார்த்த இடம் தானே’ன்னு உடனே செல்’ல எடுத்து
கால் போட்டேன் நம்ம நண்பர் வெற்றிக்கு. அவர் தஞ்சாவூர்’ல பெரிய வையதியர்’ன்னு அவரே
சொல்லிக்கறவறு
“டேய் மச்சி நான்தான்டா
பேசறேன்”
“டேய் எரும, என்ன என்
குரல்’ல மறந்துட்டியா என்ன?
“ஓகோ கூட பொண்டாட்டி
இருக்கலா, செரி வெளிய வந்து கால் பண்ணுடா”
எனக்கு நல்லா தெரியும்
அவன் கொஞ்ச நேரத்தில் பொண்டாட்டி கிட்ட எதாவது சாக்கு போக்கு சொல்லி எஸ்கேப்பு ஆகி
வெளிய வந்து தான் எங்கிட்ட பேசுவான்’ன்னு. என்ன அவன் பொண்டாட்டிக்கு இவன் என்கூட
சேர்றது கொஞ்சம் கூட பிடிக்காதுன்னு எனக்கு தெரியும். இந்த அவலநெலமைக்கு காரணம்
அந்த நாயே தான். நான் தஞ்சாவூர்’ல இருந்தப்போ தீடிருன்னு போன் பண்ணுவான்
சனிக்கிழமை ராத்திரி எட்டு மணிக்கு
“மச்சான் என் பொண்டாட்டி
போன் பண்ணி கேட்டா நான் உன்கூட தான் இருக்கேன்னு சொல்றா’ன்பான்.
“டேய் மச்சி நான் இப்போ
மெட்ராஸ்’ல இருக்கேன்டா. அப்பா அம்மா’வ பார்க்க வீக்எண்டு எங்க ஊருக்கு
வந்திருக்கேண்டா’னாலும்” கேட்க மாட்டான்.
“இப்போ நீ எங்கதான்டா
இருக்க’ன சொல்ல மாட்டான்.
ஒரு சின்ன பார்ட்டி
மச்சான்’ன்னு சொல்லி மழுபிடுவான்.
அப்போரும் நைட்டு
பண்ணிரண்டு மணிக்கு வீட்டுக்கு போயி பொண்டாட்டி கிட்ட “சாரி, இன்னிக்கி GP’க்கு பர்த்டே/ஸ்டார் பர்த்டே/அது/இது’ன்னு (எதாவது ஒரு
காரணம்) அவன் பார்ட்டி குடுத்தான். நான் வேணாம் வேணாம்னாலும் இன்னிக்கி ஒரு நாளு
எனக்காக’ன்னு ஊத்தி குடுத்துட்டான். அதான் கொஞ்சம் ஓவரா குடுச்சுட்டேன்’ன்னு பழி
மொத்தமும் என் தலை’ல போட்டு’டுவான். இப்படி தான் என் பேர இவன் பொண்டாட்டி கிட்ட
ரிப்பேர் பண்ணி இவன் நல்ல பேரு எடுத்து இருக்கான்.
கொஞ்சம் நேரத்தில அவனே
போன் பண்ணான்.“என்ன மச்சா?ன்ன”.
விஷயத்தை சொன்னேன். “அது
யாருன்னு என்னக்கு ஞாபகம் இல்லை. நீ பார்த்து விசாரிச்சு சொல்றா’ன்னேன்”.
“செரி, செஞ்சுட்டா போச்சு. ஒரு ரெண்டு நாள் டைம் குடுடா நல்லா
விசாரிச்சுடுறேன்’னான்’”
“அப்புறம் மச்சி, இப்போவாவது
திருந்துநியாடா இல்ல இன்னும்கூட சனிக்கிழமை பார்ட்டி தொடருதா?”
“ஹி ஹி இப்போ எல்லாம்
அவளோ இல்ல’ன்னான்”
“செரி நீ என்ஜோய்ஸ்
மச்சான், கண் டாக்டர் பொண்டாட்டி கண்ணுலயே மண்ணை தூவிட்டு கலக்கு நீயி”ன்னு சொல்லி
கால் கட் பண்ணிட்டேன்.
சொன்ன மாதிரியே ரெண்டு
நாள் கழிச்சி அவனே போன் பண்ணான்.
“மச்சி டென்ஷன் ஆகாதே
நான் சொல்றத கேட்டு’ன்னு” தொடங்கினான்.
“என்னடா விஷயம்? அவ
ஏற்கனவே கலியாணம் ஆனவளா’ன்னேன்”
இல்லை மச்சி, அவங்கப்பா
ஒரு சின்ன பொய்யிதான் சொல்லி இருக்காரு. அந்தப் பொண்ணு
டாக்டர் இல்லடா, அவ நர்ஸ்ஸு.
என்னது நர்ஸ்ஸா?. நல்லா
விசாரிச்சுயா?
நேர்லையே போயி
பார்த்துட்டு வந்துட்டேன் டா. அவங்க அப்பா நீ கண்டுபுடிக்க மாட்டேனு பொய்யி சொல்லி
இருக்காரு.
அடப்பாவிகளா!!! ஒரு
நர்ஸ்ஸ டாக்டர்ன்னு எந்த தைரியத்துலடா சொல்றான்னுங்க? நாம எப்படி இருந்தாலும் கண்டுபுடிச்சுட
மாட்டோமா? அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு அப்போரும்? கண்டுபிடிச்சுட்டா அடிச்சு
துரத்திட மாட்டோமா இவளோ பெரிய கப்சா விட்டதுக்கு?
அங்க தான் மச்சி நீ தப்பு
பண்ற. இதைவிட மாக புளுகு புளுகுநா கூட உன்னால ஒண்ணும் செய்ய முடியாது மச்சி. கல்யாணம்
ஆகிடுச்சுன்னா நீ பிணிஷ்டா.
என்னடா சொல்ற.
தெளிவா சொல்றா.
மச்சி டென்ஷன்
ஆகாதே. இந்த காலத்துல ஒரு பொண்ணு என்னவேணாலும் பண்ணிட்டு போலீஸ் ஸ்டேஷன்க்கு போயி
கண்ண கசக்கிட்டு நின்னா போதும்டா. பெயில்லே இல்லாம உள்ள போக வேண்டியதுதான்.
சட்டம்லாம் அவங்களோட பக்கம்டா. அதுனால தான் விடோவ், செகன்ட் மேர்ரேஜு, டிவோர்ஸ்ஸி,
நம்மளைவிட பத்து வயசு பெரியவ எல்லாம் தைரியமாக வாயுக்கு வந்த பொய்ய சொல்லிக்
ஏமாத்தி கல்யாணத்தை பண்ணிக்குதுங்க. அத கண்டுபிடுச்சு எதிர்த்துக் கேட்டா உடனே
வரதட்சணை கொடுமைன்னு ஒரு கம்ப்ளெயின்ட் குடுத்துடுவேன்ன்னு மிரட்டறாலுங்க. ஜெயில்க்கு
போயி கலி தின்ன வேணாம்ணா வாய பொத்திக்கிட்டு வாழ வேண்டியதாயிருக்கு.
மச்சி என்னடா
இப்படி குழப்புற.
ஆமா மச்சி எல்லா
வீட்லயும் இந்த கத தான் இப்பல்லாம். பொண்டாட்டிக்கு பயந்து பயந்து தான் வாழ வேண்டியதாயிருக்கு. நிம்மதியா
தண்ணி அடிச்சுட்டு வீட்டுக்கு போக கூட முடியல. இந்த வரதட்சணை கொடுமை
அம்பாளைங்களுக்கு தான் கொடுமை ஆகிடுச்சு .இதுக்கு பேசாமா உன்ன மாதிரியே
பேச்சுலர்ரா இருந்து இருக்கலாம்னு இப்போ தோணுது. நீயாவது இப்போவே எஸ்கேப்பு ஆயிட்டாட.
நாங்கெல்லாம் மாட்டிகிட்டு முழிக்கிறோம்.
இப்போ நான்
என்னடா பண்ண?
ஏதோ
காலாகாலத்தில் உண்மை தெரிஞ்சு எஸ்கேப் ஆகிட்டன்னு சந்தோஷ்பட்டுகோ. போயி வேலைய
பாருட.”ன்னு சொல்லி போன்ன கட் பண்ணிட்டான்.
என் குழப்பம்
இன்னும் தீரல. இந்த வரதட்சனை சட்டம் இருக்கற வரைக்கும் ஆம்பளைங்க பயந்து தான்
வாழணுமா? கல்யாணம் பண்ணிக்கிட்டா அடிமை தானா? நீங்க என்ன சொல்றீங்க மக்களே?
No comments:
Post a Comment